

சிவனை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவனிடம் சென்று அவிர்பாகம் பெற்று வருவதற்கு சிவனிடம் அனுமதி கேட்டாள் பார்வதி. சிவன் தடுத்தும் கேட்காமல் சென்றவளை அவமானப்படுத்தினான் தட்சன். கயிலை திரும்பிய மனைவியிடம் கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம் இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து "அகோர வீரபத்திரர்' தோன்றினார். பார்வதியின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள். இருவரிடமும் ""தட்சனிடம் சென்று அவிர்பாகம் கேளுங்கள். தராவிட்டால் அவனை அழித்துவிடுங்கள்'' என்றார் ஈஸ்வரன். ஆனால் இருவரையும் தட்சன் அவமானப்படுத்த, அவனையும், அங்கிருந்த ஆண்களையும் வீரபத்திரரும், பெண்களை பத்ரகாளியும் தாக்கினர். ஆனாலும் கடைசி வரை வீரபத்திரரின் கோபம் தணியவில்லை.
சிவனிடம் ""என் கோபம் தீர என்ன வழி?'' என்று வீரபத்திரர் கேட்க, "'தெற்கேயுள்ள அனுமந்தபுரத்தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணியும்'' என்றார் சிவபெருமான். அவ்வாறு வீரபத்திரர் அமர்ந்து கோபம் தணிந்த தலமே "அனு
மந்தபுரம்'.
செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், உடல் நிலை, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமிகளில் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி வீரபத்திரரை வழிபட அனைத்து துன்பங்களும்
நீங்கும்.
பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை மாலை சார்த்தியும், முடி காணிக்கை செலுத்தியும் வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ளது அனுமந்தபுரம்.
மேலும் தகவலுக்கு 96987 92493.
- வ. மாரிசுப்பிரமணியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.